Divine Voice
Commandments
Your Feedback
Divine Marriage

Plot No 369/2, First Main Road, Natesa Nagar, Virugambakkam, Chennai 600 092

Articles, Poems, Stories
கட்டுரைகள், கவிதைகள், கதைகள்

குருவே சரணம்! குருவடி சரணம்!

என்றோ செய்த புண்ணியப் பலனாய்,
எந்தன் உள்ளமும் இனிதென நிறைந்து,
அன்பே தனது அணிகலனாக்கி,
அகமும் புறமும் நிறைத்திட நின்றவர்!!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!

கனிவுடன் பணிவாரைப் பணிவினில் வெல்வார்!
இனிமை ஒன்றே, தன் சொலில் வந்திட;
காணும் யாவிலும் கடவுளைக் காட்டும்,
காஞ்சி மாமுனி கழலினைப் பணிந்திட!!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!

பழகிட எளிமை! பார்த்திட இனிமை!
அழகிய முகத்தின், அருளொளி இனிமை!
திகழும் புன்னகை, சிந்திட இனிமை!
புகலும் மொழிகள், கேட்டிட இனிமை!!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!

இறைவன் இருப்பது இதயத்தில் உணர்ந்தேன்!
இதயம் விழைந்தவர் இணையடி பணிந்தேன்!
நாதனவன் சொல்லில் நான்மறை தெளிந்தேன்!!
நாடும் அடியவர் நற்சங்கம் சேர்ந்தேன்!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!

குருவருள் இன்றித் திருவருள் இல்லை
குருவின் கருணையால் குறையெதும் இல்லை!
அகமதும் நிறைந்தவர் அடிமலர் பணிந்தனம்!!
அருளைப் பொழிந்திடும் அவர் தாள் சரணம்!!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!

குருவடி சரணம்! திருவடி சரணம்!
குருவே எனத் தொழ, குறைகள் அகலும்!!
வருமொரு நாளும் வளமே அருளும்
வள்ளலவர் தாள் வணங்கியே தொழுவோம்!!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!
காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!
காமகோடி சங்கர! காமாக்ஷி சங்கர!


ஸ்ரீ குருபாதுகா சமாஜம் அறக்கட்டளை
Plot No 369/2, முதல் பிரதான சாலை, நடேச நகர், விருகம்பக்கம், சென்னை - 600092


Designed and maintained by AKR Consultants