Divine Voice
Commandments
Your Feedback
Divine Marriage

Plot No 369/2, First Main Road, Natesa Nagar, Virugambakkam, Chennai 600 092

தெய்வத்தின் குரல் – சரணாகதி தத்துவம்

“அந்த காலே ச மாம் ஏவ ஸ்மரண்! நாஸ்தி அத்ர ஸம்சய!
தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு மாம் அநுஸ்மர!!”

“அந்திம காலத்தில் என்னை மட்டுமே நினைப்பவருக்கு, பிறப்பு என்பது இல்லை!

இதில் எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லை!”

தினம் பகவானை நினக்காதவனும் கூட எப்பொழுது சாகப்போகிறோம் எனத் தெரிந்தவராக, மனத் தெளிவோடு, பயமின்றி, உயிர் போகிற அந்த ஒரு க்ஷணத்திலேயாவது மனம் ஒருமுகப்பட்டு, பகவானை நினைப்பானேயாகில், அவன் பிறப்பொழிந்தவனாக ஆவான். ஆனால் இது அவ்வளவு எளிதல்ல. அந்த க்ஷணத்தில், மரண பயத்தாலோ, உணர்வு மங்கிய நிலையில், ப்ரக்ஞையில்லாதவராகவோ பகவானை நினக்காமல் போகலாம். இது எப்பொழுது சாத்தியமாகும் என்றால், “எப்பொழுதும், எல்லா காலத்திலும், என்னையே நினை!” என்று பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னபடி, வேறெந்த எண்ணமும் இல்லாது, அவர் நினைப்பை மட்டுமே அவரவர் ஆழ்மனதில் புதைத்து வைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும். இங்கு “ச” மற்றும் “ஏவ” என்ற இரு சொற்களின் பொருளை அறிந்து கொள்ள வேண்டியது, மிக முக்கியம்

ஜெகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி அருளிய “தசோபதேசம்” – முதல் உபதேசத்தின் விளக்கம்

பிறருக்கு நல்லது செய்ய கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பினையும், தக்க முறையில் பயன்படுத்திக் கொள்வது, மனிதராகப் பிறந்த நம் ஒவ்வொருவரின் கடமையாகும். உடலாலும், பணவசதியினாலும், சமுதாயத்தில் தங்களுக்குள்ள செல்வாக்கினாலேயும், சமுதாய சேவை செய்யும் உணர்வினை நமது இதயத்தில் வாழச் செய்யலாம். (உ-ம் பண வசதி குறைவாக உள்ளவர்கள், நாட்டிற்கு உண்மையாக சேவை செய்வதன் மூலம், பிறருக்கு சேவை செய்யலாம்; பண வசதி உள்ளவர்கள், தங்கள் செல்வத்தின் மூலம், இல்லாதவர்களுக்கு உதவலாம். செல்வாக்கு உள்ளவர்கள், தங்கள் செல்வாக்கினை, தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கைநிலையினை உயர்த்தப் பயன்படுத்தலாம்.)

ஜெய ஜெய சங்கர!! ஹர ஹர சங்கர!!


ஸ்ரீ குருபாதுகா சமாஜம் அறக்கட்டளை
Plot No 369/2, முதல் பிரதான சாலை, நடேச நகர், விருகம்பக்கம், சென்னை - 600092


Designed and maintained by AKR Consultants