Divine Voice
Commandments
Your Feedback
Divine Marriage

Plot No 369/2, First Main Road, Natesa Nagar, Virugambakkam, Chennai 600 092


பரமாச்சார்ய மஹா ஸ்வாமிகள்
ஜெகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி அருளிய
“தசோபதேசம்” - “பத்துக் கட்டளைகள்” – ஒரு விளக்கம்

1. பிறருக்கு நல்லது செய்ய கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பினையும், தக்க முறையில் பயன்படுத்திக் கொள்வது, மனிதராகப் பிறந்த நம் ஒவ்வொருவரின் கடமையாகும். உடலாலும், பணவசதியினாலும், சமுதாயத்தில் தங்களுக்குள்ள செல்வாக்கினாலேயும், சமுதாய சேவை செய்யும் உணர்வினை நமது இதயத்தில் வாழச் செய்யலாம். (உ-ம் பண வசதி குறைவாக உள்ளவர்கள், நாட்டிற்கு உண்மையாக சேவை செய்வதன் மூலம், பிறருக்கு சேவை செய்யலாம்; பண வசதி உள்ளவர்கள், தங்கள் செல்வத்தின் மூலம், இல்லாதவர்களுக்கு உதவலாம். செல்வாக்கு உள்ளவர்கள், தங்கள் செல்வாக்கினை, தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கைநிலையினை உயர்த்தப் பயன்படுத்தலாம்.)

2. மனிதன் தானாக, ஒரு புல்லின் இதழைக் கூட உருவாக்க இயலாது. நமக்கு வேண்டிய அன்றாட உணவினையும், உடைகளையும், அளித்த கடவுளுக்கு நன்றி தெரிவிக்காமல் இருப்போமேயானால், மிகப் பெரிய, செய்நன்றி மறந்த குற்றமிழைத்த உணர்வுடையவர்களாகக் கருதப்படுவோம் – நாமுண்ணுவதில் மிகச் சிறப்பானதும், தேர்ந்தெடுக்கப்பட்டதையுமே அவனுக்கு (இறைவனுக்கு) நிவேதனமாக்க வேண்டும். (நிவேதனம் என்றால் நன்றியுடன் அறிவித்தல் எனப் பொருள்)

3. தன்னலமில்லாத அன்பு (பிரேமை) இல்லாத வாழ்க்கை வீண். அனைத்து மனித உயிர்கள்; பறவைகள் மற்றும் விலங்கினங்களிடத்தும் பிரேமை அல்லது தூய அன்பினை நாம் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

4. தரும சிந்தனைக்கு இடமில்லாத மனிதர்கள் பாடுபட்டு, சிறுகச் சிறுக சேமித்து வைத்திருக்கும் சொத்தானாலும்,, அவர்கள் மன நிம்மதி கெடும் வகையில் பொதுவாக அவனது வாரிசுகளால் உதாரித்தனமாக செலவழிக்கப்படும். இயல்பாகவே பிறருக்கு உதவுகிற நாட்டமுடைய பரோபகாரியின் குடும்பங்கள் எந்நாளும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்படிக்கு ஆசிர்வதிக்கப்பட்டிருக்கும்.

5. பாராட்டத்தக்க வகையில் செயல் செய்திருக்கிற ஒரு மனிதன், அடுத்தவர்களின் பாராட்டுக்களை விரும்பிக் கேட்டாலோ அல்லது தானாக தனது செயல்களைக் குறித்து தற்பெருமை கொண்டாலோ அவனது நற்செயல்களினால் உண்டாகும் மதிப்பினை இழப்பான்.

6. நடந்து முடிந்த செயல்களைக் குறித்து வேதனையடைவதனால் எந்தவித நண்மையும் உண்டாகாது. நல்லதையும் தீயதையும் வேறுபடுத்தி உணரக் கற்றுக் கொண்டோமானால், அது மறுபடியும் தீமையினால் நம் நிலை தடுமாறாது நம்மைப் பாதுகாத்திருக்கும்.

7. நாம் நமது வாழ்நாளின் நாட்களை நல்ல நோக்கங்களுக்காகப் பயன்படுத்த வேண்டும். நமது சொந்த விருப்பங்களுக்கல்லாது, பிறரின் நல்வாழ்விற்குத் துணையாக இருக்கும் செயல்களில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

8. அன்றாட வாழ்வில் நமக்காக விதிக்கப்பட்டிருக்கிற அனைத்துக் கடமைகளையும் (கர்மானுஷ்டானங்களை) இறைவனிடத்து முழு விசுவாசமுடன் நம்பிக்கையுடையவராக, மனம் ஒருமுகப்பட்டு (பக்தி சிரத்தையுடன்) செய்ய வேண்டும்.

9. அவரவர் தங்களது நித்திய கடமைகளை (கர்மானுஷ்டானங்களை) தவறாது செய்வதன் மூலமே, அவர்களின் (வாழ்வின்) குறிக்கோள்களை அடைகிறார்கள்.

10. நமது அனைத்துத் துன்பங்களுக்கும் வேதனைகளுக்கும், தெளிவான வழியுரைப்பது, ஞானம் (பெறுவது) ஒன்றேயாகும்!


பரமாச்சார்ய மஹா ஸ்வாமிகள்
ஜெகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி அருளிய
“தசோபதேசம்” - “பத்துக் கட்டளைகள்”
(ஆதாரம்: தெய்வத்தின் குரல்)

1. நம் வாழ்க்கை முறையில் நடை உடை பாவனைகளில் அவரவர் குல ஆச்சாரத்திற்கேற்ப நடந்து கொள்வது.

2. அவரவர் குல ஆச்சாரப்படி செய்ய வேண்டிய, நித்திய விதிமுறைகளை (கர்மானுஷ்டானங்களை) முறை தவறாது செய்தல் வேண்டும். அது குறித்த விழிப்புணர்வினை இளைஞர்களிடையே ஏற்படுத்த வேண்டும். நமது நித்திய விதிமுறைகள் (கர்மானுஷ்டானங்கள்) மற்றும் நமது வைதீகக் காரியங்களின் (உபநயனம், திருமணம், நீத்தார் கடன் போன்ற செயல்களின்) பொருள் உணரச் செய்தல்)

3. பசு மாடுகளைக் காப்பது. (கோ சம்ரக்க்ஷணம் – கோசாலை அமைத்தல், கோபூஜை செய்தல் முதலானவை).

4. வேதம் ஓதுவது மற்றும் ஓதுவதற்கு உதவுவது. (வேத அத்யயனம், வேத அத்யாபனம்). ஆடவர்களுக்கு வேதம்/ருத்ரம் முதலியன கற்பித்தல், குழந்தைகளுக்கும் மகளிருக்கும் சமுஸ்கிருத தமிழ் ஸ்லோக வகுப்புக்களை ஏற்படுத்துவது.

5. பிடி அரிசித் திட்டம்

6. புறக்கணிக்கப்பட்ட சிதிலமடைந்த இறை வழிபாட்டுத்தலங்களை சரி செய்து பராமரிப்பது (உ-ம் பகவத் கைங்கர்யம், உழவாரப்படை திருப்பணி, சிதிலம் அடைந்த கோயில்களைப் சரி செய்வது போன்றவை). அவ்வாலயங்களில் இறை வழிபாடுகள் முறையாக நடக்க வழிவகைகள் செய்வது. நமது சிவ விஷ்ணு ஆலையத்திலேயே நித்தியமும் செய்யப்படும் ஆலையப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளலாம்.

7. சாதி மத பேதமின்றி அநாதைப் பிணங்களுக்கான இறுதிக் கடன்களைச் செய்வது ( அநாதப் பிரேத ஸ்மஸ்காரங்கள்) உத்ரக்கிரையை நடத்த தக்க வசதிகளை உண்டாக்குவது.

8. எளிமையான முறையில், முறையான வைதீகக் காரியங்களை விட்டுக் கொடுக்காமல், சமஷ்டி உபநயனங்கள் மற்றும் திருமணங்களை நடத்துவது. நடத்த உதவுவது (ஜாதகப் பரிவர்த்தனை, ஐம்பொன் தாலி மற்றும் கூறைப் புடவை வாங்கித்தருவது முதலானவை)

9. இசை மூலம் இறையுணர்வை வளர்த்தல். இலவச இசை வகுப்புக்களை நடத்துவது.

10. அரசாங்க விதிமுறைகளை மீறாமல், பெண்களுக்குரிய திருமண வயது எனக் குறிப்பிட்ட வயதிலாவது திருமணம் செய்விப்பது. வரதட்சிணையை நேராகவோ, மறைமுகமாகவோ வாங்குவது/கொடுப்பது இவற்றைத் தவிர்த்தல்.

ஜெய ஜெய சங்கரா!! ஹர ஹர சங்கரா!!


ஸ்ரீ குருபாதுகா சமாஜம் அறக்கட்டளை
Plot No 369/2, முதல் பிரதான சாலை, நடேச நகர், விருகம்பக்கம், சென்னை - 600092


Designed and maintained by AKR Consultants