Download Charts
Your Feedback

Plot No 369/2, First Main Road, Natesa Nagar, Virugambakkam, Chennai 600 092

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

"SPOKEN ENGLISH"
"FREE OF COST"
Saturdays & Sundays
10.00 AM – 11.15 AM

Eligibility: 10th STD
contact Samajam
Office Bearers
at the Temple

ஸ்ரீ குருபாதுகா சமாஜம் அறக்கட்டளை

ஸ்ரீ குரு பாதுகா சமாஜம், நடேச நகர், சென்னை – 600 092

ஜாதகப் பரிவர்த்தனை மையம்

“அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை”என்பதில் குறிக்கப்படும் அறன் எனப்படுவதற்கு, சிறந்த வாழ்க்கை நெறி, ஒழுக்கம், அல்லது “தர்மம்” என்று பெயர். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பரஸ்பரம் விருப்பத்தின் பேரில், சமுதாய அங்கீகாரத்துடன் ஒன்றாய் இணைந்து வாழ்வது, இல்லறம் எனப்படும்.அந்த வாழ்க்கையினையும் பிறர் பழிக்க வாய்ப்பில்லாது நடத்த வேண்டும். தங்களது குடும்பம் சார்ந்த கடமைகளைச் செவ்வனே செய்வதுடன், இதர வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றும் துறவிகளுக்கும் பிரம்மச்சாரிகளுக்கும் அவரவர் கடமையினை ஆற்ற உற்ற துணையாக இருப்பதுடன், வரும் விருந்தினர்களை உபசரிப்பதோடு தங்கள் குலத்தின் மறைந்த மூதாதையர்களையும் மறவாது அவரவர்க்குரிய பித்ருக் கடன்களையும் சரிவரச் செய்வது சிறந்த “தர்மம்” எனக் குறிப்பிடப்படுகிறது. எனவே இல்லறமே நல்லறம் என அறியவும்.

இதனை மஹாப்பெரியவாள் வாக்கில் கீழ்க்கண்டபடி சொல்லலாம்

“விவாஹம் சஹதர்மசரிணீ ஸம்பிரயோகம்” என்று சொல்லப்படும். (பிரம்மச்சார்யத்தில்) வேதத்தை கிரஹித்தாயிற்று. அதற்கப்புறம் எந்த ஒரு காரியமும் செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு ஒரு துணை வேண்டும்.பிரிக்க முடியாத ஒரு சொத்தாக இருக்க வேண்டும். உசிதமான ஒருவரை சேர்த்துக் கொள்ள வேண்டும். சேர்த்து தர்மானுஷ்டானம் பண்ணுகிறவர்களுடைய சேர்க்கை வேண்டும். பிரம்மச்சார்யம், சந்நியாஸம் என்னும் இரண்டிலும் செய்யும் கர்ம பலன்கள் புருஷனின் சொத்து. கிருஹ்யதர்மம் பொது சொத்து. பதியும் பத்தினியும் சேர்ந்து பொது சொத்தான கிருஹ்யதர்மத்தை அனுசரிக்க வேண்டும். இந்த நோக்கம் சரிவர நிறைவேற உதவ, நல்ல இல்லறம் அமைய வேண்டும்”.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, சென்னையில் விருகம்பாக்கம் (நடேச நகர்) பகுதிகளில், ஆன்மீக மற்றும் சமுதாய சேவை செய்து வரும் ஸ்ரீ குரு பாதுகா சமாஜம், இந்துக்களின் இந்த மிக முக்கியமான கடமைகளில் ஒன்றான இல்லறம் சிறப்பாக அமைய, மணமகன்/மணமகள் தேர்வு செய்வதில் உதவியாக, கலியுகத்தில் இன்றளவும் நடமாடும் தெய்வமாயிருந்து எல்லோருக்கும் அருள் பாலித்து வரும் காஞ்சி மாமுனிவர், மஹாப் பெரியவர் ஸ்ரீ ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருளாசியுடன், ஜாதகப் பரிவர்த்தனை மையம் ஒன்றினைத் தொடங்கியிருக்கிறது.

அனைத்து இந்துக்களும் இந்த ஸ்ரீ குரு பாதுகா சமாஜம் – ஜாதகப் பரிவர்த்தனை மையத்தில் பதிவு செய்து கொண்டு, தங்கள் மகன் அல்லது மகளுக்கு உரிய வரனைத் தேர்ந்தெடுத்துத் திருமனம் செய்து பலன் பெறலாம்.

இம்மையம் சமாஜத்தின் தன்னார்வத் தொண்டர்களால் நம்து நகரில் உள்ள சிவ-விஷ்ணு ஆலய வளாகத்தில் பிரதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில், மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடத்தப்படுகிறது. அனைவரும் பங்கேற்றுப் பயன் பெறவும்.

விருப்பமுடைய பெற்றோர்கள், ஜாதகம் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை (PDF FILE) இந்த தளத்திலிருந்து இறக்கி, பிரிண்ட் செய்து கொள்ளவும். விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து, கையெழுத்திட்டு, மின்னஞ்சல் விவரத்துடன், ஜாதகத்தின் மூலப் பிரதி ஒன்றையும் இணைத்து, பதிவுக் கட்டணத்துடன் கீழ்க்கண்ட முகவரிக்கு, அனுப்பி வைக்கவும்.

விண்ணப்பத்தில் கையெழுத்திடுவதன் மூலம் சமாஜத்தின் அனைத்து விதிகளுக்கும் கட்டுப்படுகிறார்கள் என்பதனையும், ஜாதகம் குறித்த விவரங்களுக்கு முழுப் பொறுப்பேற்கிறார்கள் என்பதனையும், ஜாதகம் குறித்த விவரங்களுக்கு சமாஜம் எந்த விதத்திலும் பொறுப்பாகாது என்பதனையும் அறியவும்.

கையெழுத்தில்லாத விண்ணப்பங்கள், முழு விவரம் இல்லாத விண்ணப்பங்கள் பதிவுக்கான கட்டணம் இல்லாத விண்ணப்பங்கள் - இவை ஏற்கப்பட மாட்டாது.

பதிவு செய்ய, ஒரு முறை கட்டணமாக Rs 100/- (ருபாய் நூறு மட்டும்) காசோலையாகவோ, மணியார்டர் மூலமாகவோ, வங்கி டி டி ஆகவோ “SRI GURU PADHUKA SAMAJAM CHARITABLE TRUST” என்ற பெயருக்கு வாங்கி அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி

ஸ்ரீ குருபாதுகா ஸமாஜம் அறக்கட்டளை
ஜாதகப் பரிவர்த்தனை மையம்
Plot No 369/2, முதல் பிரதான சாலை,
நடேச நகர், விருகம்பக்கம், சென்னை - 600092
Phone No – 2479 7273
Email Id – sriguru09@gmail.com
SRI GURU PADHUKA SAMAJAM CHARITABLE TRUST
JADHAGA PARIVARTHANAI CENTER
Plot No 369/2, 1st MAIN ROAD,
NATESA NAGAR, CHENNAI 600 092
Phone No – 2479 7273
Email Id – sriguru09@gmail.com

பதிவு செய்த ஒரு வாரத்தில், மின்னஞ்சல் மூலம் பதில் அனுப்பப்படும். அதன் பிறகு, பதிவு செய்தவர், நேரிலோ, அல்லது தனது மின்னஞ்சல் பாஸ்வேர்ட் மூலம் இந்தத் தளத்திலோ, பதிவு செய்யப்பட்ட அனைத்து ஜாதகங்களையும் பெற்றுக் கொள்ளலாம்/இறக்கிக் கொள்ளலாம். ஆனால் எந்த விவரத்தையும் மாற்ற இயலாது.

மேலும் விவரங்களுக்கு ஸ்ரீ குரு பாதுகா சமாஜத்தின் தன்னார்வத் தொண்டர்களை sriguru09@gmail.com என்ற மின்னஞ்சல் தொடர்பு கொள்ளவும்


ஸ்ரீ குருபாதுகா சமாஜம் அறக்கட்டளை
Plot No 369/2, முதல் பிரதான சாலை, நடேச நகர், விருகம்பக்கம், சென்னை - 600092


Designed and maintained by AKR Consultants