Nagar Slideshow
Nagar Issues
Nagar Souvenir
Your Feedback

Plot No 369/2, First Main Road, Natesa Nagar, Virugambakkam, Chennai 600 092

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

நடேச நகர் ஸிவிக் அஸோஸியேஷன்
(பதிவு செய்யப்பட்டது - 909168)
மனை எண் 218A - 3வது குறுக்குத் தெரு
நடேச நகர் சென்னை 92

Natesa Nagar Issues - நடேச நகர் பிரச்சினைகள்

நகரின் முதன்மையான பிரச்சினைகளாகப் பட்டியலிட்டவைகளைச்
சரி செய்ய பொதுநலச் சங்கம் எடுத்த/எடுக்கப் போகும் நடவடிக்கைகளும்
அதற்கு உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் பங்கேற்பு மற்றும் ஒத்துழைப்பும்

வ.எண் பொதுநலச் சங்கம் எடுத்த/எடுக்கப்ப போகும் நடவடிக்கைகள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் ஒத்துழைப்பு
1 நகரில் குப்பை கூளங்களை விரைவாக அகற்ற முடிகிற வகையில் மேலும் இரு வண்டிகள் வாங்கப்பட்டுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. பழுதான ஒரு வண்டியும் சரிபார்க்கப்பட்டு உபயோகத்தில் உள்ளது. தெருக்களில் குப்பைகளைப் போடாமலும், நாய் போன்ற விலங்கினங்கள் இழுத்துச்சென்று அசுத்தப்படுத்தாமலும் இருக்கும்படிக் குப்பைகளைச் சேமித்து, வண்டி வரும்பொழுது எடுத்துச் செல்லும்படி வையுங்கள்
2 சாலையினைச் சீர் செய்வது குறித்து மாநகராட்சி நிர்வாகம் மற்றும் வார்டுக் கவுன்சிலர்களிடம் முறையிடப் பட்டுள்ளது மற்றும் தொடர்புடைய பணிகளை ஒருங்கிணைக்கச் சிறப்புக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. மேற்படிக் கூட்டங்கள் கூட்டப்படும் பொழுது பெரும் திரளாக வந்திருந்து நமது நகரின் ஒற்றுமையினை வெளிக்காட்டுங்கள்.
3 ஒவ்வொரு தெருவிலும் மின் விளக்குகள் எரியாமலிருப்பதனைக் குறிப்பிட்டு மின்சார வாரியப் பொறியாளர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு முறையிட்டு அவற்றை சரி செய்ய முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. தெரு மின் விளக்குகள் எரியாமலிருந்தால், பொதுநலச்சங்க அலுவலகத்தில் உள்ள புகார்ப் புத்தகத்தில் பதிவு செய்யுங்கள்.
4 பேருந்துகள் சரிவர இயங்காமலிருப்பதனைச் சுட்டிக் காட்டி அதிக எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்கக் கோரி அதற்கான அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தல். நகரில் பேருந்துகளைப் பயன்படுத்துவோர் குறித்த புள்ளி விவரங்களை உங்கள் தெருவிற்கு வரும் சங்க உறுப்பினர்களுக்குத் தந்து உதவுங்கள். பேருந்து நிர்வாக அதிகாரிகளுடன் ஏற்பாடு செய்யப்படவிருக்கும் அனைத்துக் கூட்டங்களில் பெருவாரியாகப் பங்கேற்று உங்கள் ஆதரவினைத் தெரிவியுங்கள்.
5 பூங்காவின் பராமரிப்பின் ஒரு பகுதியாக கோரைப்புற்கள் அகற்றப்பட்டுள்ளது. சத்துணவுக் கூடத்தை ஒட்டிய ஆலையம் செல்லும் வழியில், பூங்காவினுள் 4 குழல் விளக்குகள் பொருத்தப்பட உள்ளது. மரக்கிளைகளை அகற்றி வெளிச்சம் பெற ஏற்பாடுகள் செய்யப்பட இருக்கிறது. பூங்கா நடைப்பயிற்சிக்கான பொதுமக்கள் தங்கள் மாலை நேரத்தினை மகிழ்ச்சியாகக் கழிக்க ஒதுக்கப்பட்ட ஒரு இடம் என்பதால், அங்கு மற்ற தொழில் முறைச் செயல்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் இதற்காகச் சங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உங்கள் ஆதரவு தேவை.
6 நகரின் பொதுவான பிரச்சினைகளும் மற்றும் பொது நலச் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் சங்கம் சந்திக்கும் சவால்கள், வருவாய்க் குறைவு சார்ந்த நெருக்கடிகள், இதர முட்டுக்கட்டைகள் ஆகியவை பரஸ்பரம் முழுமையாக அறியப்படத் தெருவாரியாகச் சென்று உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ளவும், அத்தெருவில் உள்ளோர் சந்திக்கும் முதன்மையான பிரச்சினைகளைக் குறித்துப் பேசி ஒரு செயற்திட்டம் உருவாக்கவும், மாதம் ஒரு சந்திப்பு நமது பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது

காளிகாம்பாள் தெருவும் நடேச நகர் முதன்மைச் சாலைகளும் சந்திக்கும் இடங்களிலும், பால் வழங்குமிடம், பூங்கா மற்றும் மின்சார வாரிய அலுவலகம் இவற்றின் முன்பும் சங்க நடவடிக்கைகளை எல்லோரும் அறிந்து கொள்ளத் தக்க வகையில் சங்கத்தின் அதிகார பூர்வமான அறிக்கைப் பலகைகள் நிறுவ ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

நமது வட்டார செய்தித்தாள்களின் உதவியுடன் செய்திகளைப் பறிமாறிக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட இருக்கிறது

உங்களது தெருவிற்கு மற்றும் இல்லத்திற்கு வரும் பொது நலச் சங்க உறுப்பினர்களைச் சந்தித்து அவர்கள் கேட்கும் புள்ளி விவரங்களைத் தருவதோடு, பூங்காவில் சங்கம் ஏற்பாடு செய்யும் மாதாந்திரக் கூட்டங்களில் பெருவாரியாகக் கலந்து கொண்டு உங்களின் ஆக்கபூர்வமானக் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

இதனை நிறுவும் செலவினை ஏற்க முன்வருபவர்களை வரவேற்கிறோம்.

இதற்கான செயல்களில் உடன் ஒத்துழைக்க முன்வருபவர்களை வரவேற்கிறோம்.


ஸ்ரீ குருபாதுகா சமாஜம் அறக்கட்டளை
Plot No 369/2, முதல் பிரதான சாலை, நடேச நகர், விருகம்பக்கம், சென்னை - 600092


Designed and maintained by AKR Consultants