ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
"SPOKEN ENGLISH"
"FREE OF COST"
Saturdays & Sundays
10.00 AM – 11.15 AM
Eligibility: 10th STD
contact Samajam
Office Bearers
at the Temple
-
Natesa Nagar Souvenir - நடேச நகர் மலர்
மலர்-1 (அக்டோபர் – டிசம்பர்) இதழ் - 1
அன்புள்ள அங்கத்தினர்களே மற்றும் இந் நகரில் குடியிருப்போர்களே உங்களனைவருக்கும் வணக்கம்!
இனிய தீபாவளி மற்றும் கிருஸ்துமஸ் வாழ்த்துகளைச் சுமந்து இந்த மடல் உங்களை அடைவதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம்.
கடந்த 20-09-2009 அன்று நடந்து முடிந்த 43 வது வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில், 20 செயற் குழு உறுப்பினர்களைக் கொண்ட புதிய நிர்வாகக் குழு, அடுத்து வரும் 2009 முதல் 2011 வரையிலான இரண்டாண்டுக்கான நகரின் பிரச்சினைகளைச் சிறப்பான முறையில் நிர்வகிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். பிற்சேர்க்கையில் (Annexure 1) செயற் குழுவின் உறுப்பினர் பெயர் விவரங்கள் தரப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து 3-10-2009 அன்றே நடந்த செயற்குழு உறுப்பினர் கூட்டத்தில், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுநலச் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் பெயர்கள் கீழ்க்குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதையும் அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம்.
புதியதாகப் பொறுப்பேற்றுள்ள நிர்வாகக்குழு உறுப்பினர்களின் பெயர்கள்
இந்த 2009 – 20011 ஆண்டுகளில், நாங்கள் சிறப்பாகப் பணியாற்ற உங்களனைவரின் ஒத்துழைப்பையும் ஆதரவினையும் மற்றும் பங்கேற்பினையும் எதிர்பார்க்கிறோம்.
நம் முன் நிற்கும் சவால்: வளர்ந்து வரும் சென்னை மாநகரின் முக்கியமான பகுதியில் ஓர் பெரிய ஆலையமும் மரங்களடர்ந்த அழகிய பூங்காவுமாக மிகச் சிறப்பான முறையில் திட்டமிடப்பட்ட நகர்களுள், நமது நடேச நகர் அமைப்பும் ஒன்று என்பதனையும், 5 முதன்மைச் சாலைகளும், 7 குறுக்குத் தெருக்களும் கொண்டு, 1500 குடியிருப்புக்களும் 7500க்கும் மேற்பட்ட மக்கட்தொகை உடைய அமைதியான நகர். இதனைக் குறித்து நாம் பெருமைப்படும் அதே நேரத்தில், இந்நகரினைக் குப்பை கூளங்களற்ற அழகிய நகராக வைத்திருக்க வேண்டியது நமது முதன்மைப் பணியாக இருக்கிறது என்பதனையும் உணர்கிறோம். இந்த முயற்சியில், எங்களுடன் ஒத்துழைக்கும் உங்கள் அனைவரின் பங்கு பணி பெரிதும் போற்றற்குறியது. “மக்கள் பணியே மகேசன் பணி” என்ற வகையில், ஆலயப்பணிகளையும்விடச் சிறப்பாக இந்நகரின் உடனடியான பொதுவான மக்கள் நலத் தேவைகளைச் சிறப்பாக நிறைவேற்றுவது எங்களது முதல் குறிக்கோள். இதற்கான முழு ஒத்துழைப்பும் உளமார்ந்த பங்கேற்பும் தொடர்ந்து உங்களிடமிருந்து வரும் என்பதில் எங்களுக்கு எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை.
நமது முயற்சிகள்: அதன் முதற்படியாக, புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கு உங்கள் பங்கேற்பினைக் கோருகிறோம். இந்தப் பணியினைச் சிறப்பாக முடிக்க, நமது பொதுநலச் சங்கத்தின் உறுப்பினர்கள் உங்களைச் சந்திக்க வருவார்கள். முழு ஒத்துழைப்பை நல்குவீர் உங்கள் அக்கம் பக்கத்துக் குடியிருப்போர், அண்டை வீட்டு நண்பர்கள் யாரேனும் இன்னமும் பொது நலச்சங்கத்தில் உறுப்பினராகாமல் இருந்தால், ஆயுள் சந்தாதாரர் ஆவதற்கான ஒரு முறை கட்ட வேண்டிய தொகையான ரு 105/- க் கட்டி உடனடியாக ஆயுள் சந்தா உறுப்பினராகும்படி தயவு செய்து எங்கள் சார்பில் அவர்களைக் கேட்டுக்கொள்ளுங்கள். பொதுநலச் சங்கத்தின் ஆக்கப்பணிகளில் அவர்களும் பங்கேற்க உதவுங்கள்..
வரும் புத்தாண்டில் உறுப்பினர் அனைவருக்கும் உறுப்பினர் அடையாள அட்டையும் ஒரு பரிசும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மனைச் சொந்தக்காரர்களுக்கு ரு 170/- ம் மற்றும் அடுக்கு மாடிக்குடியிருப்போருக்கு ஒவ்வொருவருக்குமாக ரு 120/- எனப் பொதுக்குழுக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வருடாந்திரப் பராமரிப்புத் தொகையினை உங்களில் யாரேனும் இன்னமும் கட்டாமலிருந்தால், அதனை உடனடியாகக் கட்டி, உங்கள் உறுப்பினர் நிலையைப் புதுப்பித்துக் கொள்ள உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
இத்தோகை நம் பொதுநலச் சங்கம், வரும் நாளில் திட்டமிடப்பட்டுள்ள நம் நகரின் பல ஆக்கப்பணிகளுக்குத் தேவையான ஒன்று என்பதனையும் நகரின் குறிப்பிட்ட பிரச்சினைகளுக்குத் தக்க தீர்வு காணும் முயற்சியில் அரசு அலுவலகப் பிரதிநிதிகளைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்படும் நிகழ்ச்சிகளில், உறுப்பினர்கள் ஒன்று திரண்டு வரவேண்டியது அவசியம் என்பதனையும் நீங்கள் அனைவரும் ஒப்புக் கொள்வீர்கள். திரளாக வந்திருந்து எங்களின் கரத்தை வலுப்படுத்துங்கள்.
உங்களிடம் கோருவது: நகரின் பொதுவான கீழ்க்கண்ட பிரச்சினைகளைத் தீர்க்க ஏற்ற நடைமுறை செயற்திட்டம் ஒன்று உருவாக்குவது தொடர்பாக உங்களின் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.
1. நகரின் முதன்மையான பிரச்சினை என இனம் காணப்பட்ட, குப்பை கூளங்கள் தெருவெங்கும் பரவிக்கிடப்பது மற்றும் முறையான வகையில் அகற்றப்படாதது.
2. கழிவு நீர் சரியான முறையில் அகற்றப்படாதது, அதனால் மழைக்காலத்தில் உண்டாகும் பாதிப்புக்களைக் குறைக்க வழி காணுவது.
3. நகரின் இதர பொதுவான பிரச்சினைகளும் மற்றும் பொது நலச் சங்கத்தின் செயல்பாடுகள், அதன் நெருக்கடிகள் / முட்டுக்கட்டைகள் மற்றும் சங்கம் சந்திக்கும் சவால்கள் ஆகியவை பரஸ்பரம் முழுமையாக அறியப்படாதிருப்பது.
நமது அஸோஸியேஷன் மேலும் சிறப்பாக நடைபெற எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவேற உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் ஒத்துழைப்பினையும், பங்கேற்பினையும் வரவேற்கிறோம்.
கொண்டாட்டங்கள்: இந்த ஆண்டும் பொங்கல் மற்றும் குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களைச் கீழ்க்கண்டபடி சிறப்பாக, நம்து பூங்காவில் நடத்த எண்ணியுள்ளோம். வெற்றி பெற்றவர்களுக்கு குடியரசு தினத்தன்று பரிசுகள் வழங்கப்படும். அந்த விழாவினை சிறப்பாக் ஏற்று நடத்த தாமாக முன்வருபவரை வரவேற்கிறோம். மேலும் விவரங்களுக்கு அஸோஸியேஷன் மற்றும் ஆலைய வளாக அறிவிப்புப் பலகையினைப் பார்க்கவும்.
1. சிறுவர் சிறுமியருக்கான வினா – விடை, வண்ணம் தீட்டுதல், பேச்சு மற்றும் பாட்டுப் போட்டிகள்
2. மகளிருக்கான பேச்சு மற்றும் பாட்டுப் போட்டிகள், கோலப் போட்டிகள், இசைக் கட்டப் போட்டிகள்
3. மகளிர் மற்றும் ஆடவருக்கான பட்டி மன்றங்கள்.
4. 10 வது மற்றும் +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களைப் பாராட்டிப் பரிசளித்தல்.
நமது பிரச்சினைகளையும் அதனைத் தீர்ப்பதில் எங்களின் செயலாக்கம் குறித்த தங்களின் மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பொது நலச் சங்கத்தின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஆலோசனைப் பெட்டியில் சேர்க்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். நடைமுறை சாத்தியமான கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என உறுதியளிக்கிறோம். சிறப்பான நடைமுறை சாத்தியமான கருத்துகள் ஏற்கப்பட்டுச் செயலாக்கப் பட்டால், ஆலோசனை அளித்தவருக்கு குடியரசு தின விழாவில் பாராட்டும் பரிசும் அளிக்கப்படும்.
தங்கள் உண்மையுள்ள
R.சுரேஷ் பாபு
பொதுச்செயலாளர்
(Annexure 1) பிற்சேர்க்கை - 1
புதியதாகப் பொறுப்பேற்றுள்ள செயற்குழுவின் உறுப்பினர்களின் பெயர்கள்
ஸ்ரீ குருபாதுகா சமாஜம் அறக்கட்டளை
Plot No 369/2, முதல் பிரதான சாலை, நடேச நகர், விருகம்பக்கம், சென்னை - 600092
Designed and maintained by AKR Consultants

