Activities
Samajam Events
Video Section
Membership Form
Your Feedback

SLIDESHOWS

Samajam
Divine Marriage
Jayanthi 117
Jayanthi 117

Plot No 369/2, First Main Road, Natesa Nagar, Virugambakkam, Chennai 600 092

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

"SPOKEN ENGLISH"
"FREE OF COST"
Saturdays & Sundays
10.00 AM – 11.15 AM

Eligibility: 10th STD
contact Samajam
Office Bearers
at the Temple

ஸ்ரீ குருபாதுகா சமாஜம் அறக்கட்டளை

ஸ்ரீ குருபாதுகா சமாஜம் அறக்கட்டளையின் செயல்பாடுகள்

சமாஜத்தின் தொடக்கம்

இறையருளினால், காஞ்சி மாமுனிவரின் அருட்பார்வை சென்னையின் மிகப் பிரதானமான பகுதியாகிய விருகம்பாக்கத்தில் உள்ள நடேச நகரின் மீது பட்டதன் காரணமாக, நமது சிவ விஷ்ணு ஆலயத்தில், 1994 வாக்கில், ஒரு சிறு குழுவாக இச்சமாஜம் தோன்றியது. கூட்டுப் பிரார்த்தனை மூலம் இறைவனை வேண்டிக் கொள்வது மக்களின் குறைகள் தீரவும், மனம் நிம்மதி பெறவும் உதவும் சிறப்பான வழியென்ற மஹாப்பெரியவாளின் அறிவுரையின் பேரில், இக்குழுவால் கூட்டுப்பிரார்த்தனை தொடங்கப்பட்டது. நமது ஆலயத்தில் அன்றாடம் நடைபெறும் மாலை வழிபாட்டில், பிரதி மாதமும், மஹாப்பெரியவாளின் ஜன்ம நக்ஷ்த்ரமான அனுஷத்தன்று, சிறு அளவில் கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்பெற்றது.

பெயர் வந்த விவரம்

மஹாப்பெரியாவாளிடம் சேவை செய்து வந்த தெய்வத்திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் நமது கூட்டுப்பிராத்தனையில் கலந்து கொண்டு, மஹாப்பெரியாவாளின் அருளுரைகளைக் கூறி அவரது அனுக்கிரகத்திற்கு நம்மை ஏற்றவர்களாகும்படி உருவாக்கினார். வருங்காலத்தில், மஹாப்பெரியவாள் வாழ்ந்து வந்த காஞ்சி மாநகர் போல இந்த நடேச நகரும் சிறப்படைய வேண்டும், என்று வாழ்த்தி, சிறப்படையும் என்ற நம்பிக்கையுடன் இந்த அமைப்பிற்கு “ஸ்ரீ குருபாதுகா சமாஜம்” என்று பெயர் சூட்டினார். அவர் வாழ்த்து வீண் போகாமல் இந்த அமைப்பு, தன்னாலியன்ற அளவில் சிறப்பான ஆன்மீக, சமுதாயப் பணிகளை செய்து வருகிறது.

மஹாப் பெரியவாளின் திருமூர்த்தம் ஸ்தாபிக்கப்பட்ட விவரம்

சிலகாலம் மஹாஸ்வாமிகளின் திருவுருவப்படத்தின் முன் கூட்டுப் பிரார்த்தனைகள் நடத்தப்பெற்றன. பின்னர் பக்தர்களின் ஏகோபித்த ஆதரவினாலும், பக்தியின் வலிமையாலும், மஹாப்பெரியவாளின் அனுகிரகத்தினாலும், 2001 வாக்கில் மஹாப்பெரியவாளின் ஐம்பொன் மூர்த்தம் சென்னையிலேயே முதன் முறையாக, நமது சிவ விஷ்ணு ஆலயத்தில், சிவ விஷ்ணு ஆலய திருப்பணிக் குழுவின் பரிபூரண சம்மதத்துடன் அருள்மிகு பிரசன்ன விநாயகர் சன்னதிக்கு முன் உள்ள இடத்தில் ஸ்ரீ குரு பாதுகா சமாஜத்தின் மூலம் வைதீகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மஹாப்பெரியவாளின் இந்த பஞ்சலோக விக்கிரகம் தத்ரூபமாக இருப்பதாகப் பலர் பாராட்டப்படுவதற்கு, திரு P.H.கோபால கிருஷ்ணன் அவர்கள் எடுத்த முயற்சிகள் பெரிதும் பாராட்டத்தக்கது. பஞ்சலோக விக்கிரகத்தை திரு கணேச சர்மா அவர்கள் “சப்தகாண்டத்தின் பொழுது, “ஸ்வாமிநாதனை” (மஹாஸ்வாமிகளின் பூர்வாஸ்ரமப்பெயர்) அவரது அண்ணன் பிரசன்ன விநாயகர் அருகில் அமர்த்தியுள்ளதாகத் தெரிவித்தார். இருவரும் இன்றளவும் தன்னைச் சரணடையும் அன்பர்களுக்கு நல்லருள் புரிந்து வருகிறார்கள்.

மஹாப்பெரியவாளே சொன்னது போல, தனியொரு மனிதனாக, தனக்கு நல்லது நடக்க வேண்டும் எனப் பிரார்த்திப்பதனைவிட, தான் சார்ந்த சமுதாயத்தின் நலன் வேண்டி எல்லோரும் கூட்டாகப் பிரார்த்தனை செய்வது அனைவருக்கும் மிகச் சிறப்பான பலனைத் தரும்; தந்திருக்கிறது என்பதனைக் கண்கூடாகக் கண்டு அனுபவித்த அன்பர்கள் அநேகம் பேர் ஒவ்வொரு அனுஷத்தன்றும் தங்களின் இறையனுபவத்தின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது நாமனைவரும் அறிந்த ஓர் அற்புதமே!!

தொடரும் ஆன்மீகப் பணிகள்

• மஹாப்பெரியவாளின் ஐம்பொன் மூர்த்தம் நிறுவப்பட்ட அன்று முதல் இன்று வரை பிரதி அனுஷத்தன்றும் மாலையில் அருள்மிகு பிரசன்ன விநாயகர் சன்னதிக்கு முன் உள்ள வெள்ளி விழா மண்டபத்தில் மஹாப்பெரியவாளின் ஐம்பொன் மூர்த்தம் வைக்கப்பட்டு, அம்மூர்த்தத்தின் முன் கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்படுகிறது. முடிவில் அர்ச்சனை செய்து கற்பூர ஹாரத்தி காட்டப்பெற்று பிரசாத விநியோகமும் செய்யப்படுகிறது. கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் அனைவருக்கும் கூட்டுப்பிரார்த்தனையில் இசைக்கப்படும் பாடல்கள் அடங்கிய கைப்புத்தகம் ஒன்றும், சமாஜத்தின் பொருட்தேவைகளுக்குப் பெரிதும் உதவி வரும் திரு லக்ஷ்மி நாராயணன் அவர்கள் முயற்சியால், இலவசமாக வழங்கப்பட்டிருக்கிறது.

• ஒவ்வொரு வருடமும் மஹாப்பெரியவாளின் ஜெயந்தி மகோத்சவம் பொதுவாக மூன்று நாட்கள் நடத்தப்படுகிறது. இளம்சிறார்களையும் மகளிரையும் ஊக்குவிக்கும் வகையிலும், இயல் இசை மற்றும் நாட்டியம் என்ற முத்தமிழுக்கும் மதிப்பளிக்கும் வகையிலும், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சமுஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் சம மதிப்பு வழங்கப்பட்டு, கூட்டுப்பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன. ஜெயந்தி நாளன்று வைதீகமாக ஸ்ரீ தீர்த்த நாராயண கலசஸ்தாபனம், ஆவஹந்தி ஹோமம், ஏகாதச ருத்ர பாராயணம் ஸ்ரீ ருத்ர ஹோமம், மஹன்யாசம் முதலானவை தக்க வேத விற்பன்னர்களால் நடத்தப்பெற்று, மஹாப்பெரியவாளின் மூர்த்தத்திற்கு சிறப்பான முறையில், அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகிறது. ஜெயந்தி நாளன்று சிறப்பான வகையில், சாதி மத பேதமின்றி அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்படுகிறது. மாலையில் திருவீதி உலா எடுக்கப்பெற்று, மஹாதீபாராதனைக்குப் பின் பிரசாதமும் வழங்கப்படுகிறது. இந்த வருடம் ஜெயந்தி விழா ஐந்து நாட்களாகக் கொண்டாடப்பெற்றதும், மகளிர் பலர் பங்கேற்று நடத்திய சிறப்புத் திருவிளக்கு பூஜையும் குறிப்பிடத்தக்க ஒரு முக்கியமான அம்சமாகும்.

• ஆன்மீக/இலக்கியப் பணியின் ஓரங்கமாக பிரதி மாதமும் ஆலயத்துடன் இணைந்து சிறப்புச் சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில் ஆலயத் திருப்பணிக் குழுவின் செயலர் திரு A.K.நரசிம்மன் அவர்கள் பெரும் ஆர்வம் காட்டி நம்மை ஊக்குவிப்பதும் ஒத்துழைப்பு நல்குவதும் குறிப்பிடத்தக்கது. பெருமதிப்பிற்குரிய பிரும்மஸ்ரீ சுந்தர் குமார், ஸ்ரீ கணேச சர்மா, திரு முரளிதர ஸ்வாமிகள், திரு விக்கு விநாயகராம், அருள்மிகு காமாக்ஷி ஸ்வாமிகள் போன்ற பக்திமான்கள், மற்றும் திருமதி சுதா சேஷைய்யன், திரு ஔவை நடராஜன், திரு இந்திரா சௌந்தரராஜன் போன்ற பல பிரபல பேச்சாளர்களின் ஆன்மீக சொற்பொழிவுகள், இசைப்பேருரைகள் நடத்தப்பெற்று வருகிறது. ஆரம்ப காலங்களில் இத்தகு சொற்பொழிவுகள் சமாஜத்தின் அன்பர்கள் பலரின் இல்லங்களிலேயே நடத்தப்பெற்று வந்தது. கடந்த நான்கு வருடங்களாக ஆலய நிர்வாகக்குழுவின் பங்கேற்புடன், ஆலய வளாகத்திலேயே சிறப்பாக நடத்தப்படுகிறது.

• நமது சமாஜமும் ஆலயமும் இணைந்து, 2006-ல் நமது ஆலயத்தில், சிறப்பாக ஸ்ரீ சண்டி ஹோமம் நடத்தியது.

• இந்த வருட முதலில், ஸ்ரீ ராதா கல்யாண மகோத்சவமும் சம்பிரதாய பஜனைகளுடன் பக்தர்களின் சிறப்பான பங்கேற்புடன் நடத்தப்பெற்றது.

• கடந்த மூன்று வருடங்களாக அருள்மிகு தர்மசம்வர்த்தனி (அறம் காக்கும் நாயகி) அம்மனுக்கு வருடத்தில் இரு முறை ஏகதின லக்ஷார்ச்சனை செய்யப்பட்டு வருகிறது.

• மகளிர் அணியின் சிறப்பான பங்கேற்பினால், தினசரி ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமப் பாராயணமும் நடந்து வருவது நீங்கள் அறிந்ததே.

• இந்த வைதீக கைங்கர்யங்கள், பாராயணங்கள், மற்றும் கூட்டுப் பிரார்த்தனைகள் சிறப்பாக நடந்தேற “குருஜி” என நம்மால் அன்புடன் அழைக்கப் பெற்ற, தெய்வத்திரு சிவராம கிருஷ்ணன், தனது தேக ஆரோக்கியம் சரியாக இல்லாத காலத்தும் பங்கேற்று வழி நடத்தியதும் நம் சமாஜத்தின் அன்பர்கள் பலருக்கு ருத்ரம் மற்றும் ஸ்லோக வகுப்புகள் எடுப்பதில் மிக்க ஆர்வம் காட்டியதும் குறிப்பிடத்தக்கது.

• இந்த ஜுலை மாத அனுஷத்திலிருந்து தேவாரம், திருவாசகம் மற்றும் திவ்வியப் பிரபந்தங்கள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்க, அவற்றை இசைக்கும் பணியும் தொடங்கப் பெற்றுள்ளது. இந்த முயற்சிக்குக் கிடைக்கும் வரவேற்பினைப் பொறுத்து இலவச தேவார, திருவாசக வகுப்புகள் ஆரம்பிக்கப்படும்.

தொடரும் சமுதாயப் பணிகள்

• சமுதாயப் பணியின் ஒரு அங்கமாக, கடந்த 5 வருடமாக, விளம்பரமில்லாமல் குடுமப வருமானம், மாணவர்களின் ஆர்வம், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இதரத் தகுதியின் அடிப்படையில், ஏழை மாணவ/மாணவிகளுக்கு பள்ளிக் கட்டணம் மற்றும் புத்தகங்கள் வாங்க நிதி உதவி செய்யப்பட்டு வருகிறது. உங்களின் ஒருமித்த ஆதரவுடன் இது தொடரும்.

• சிறிய அளவிலே பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு மருத்துவ உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

• அனைத்து இந்து சமுதாயத்தினரின் மகன்/மகள் திருமணத்திற்கான வரன் தேடும் பணியில் உதவ “ஜாதகப் பரிவர்த்தனை மையம்” ஒன்று ஏற்படுத்தப்பெற்று கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்று வருகிறது. மையத்தின் செயல்பாடுகள் குறித்த விளம்பரமும் விழிப்புணர்வும் குறைவாக இருப்பதால், அதற்கு வரும் ஜாதகங்கள் குறைவாகவே இருக்கிறது. இது வெற்றிகரமாக செயல்படுவதும், இதன் சேவைகள் தொடர்வதும் நம் முயற்சியில்தான் இருக்கிறது. எனவே அனைவருக்கும் இதன் செயல்பாட்டினை எடுத்த்ச் சொல்லி இம்மையத்தின் சேவைகளைச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளச் சொல்லுங்கள்.

• இவை அனைத்தும் சமாஜத்தின் தற்பொழுதைய நிதி ஆதாரத்தைப் பொறுத்து செயல்படுத்தப்படுகிறது. இன்றளவும் சமாஜத்தின் அனைத்துப் பணிகளும் உங்களின் அன்பளிப்பை (“Donation” )ஆதாரமாகக் கொண்டே நடத்தப் பெற்று வருகிறது. அதன் விவரங்களை சமாஜத்தின் நிதி நிலை அறிக்கையில் காணலாம். இன்றளவும் இந்த சமாஜம் சிறப்பாகப் பணியாற்ற தக்க ஆலோசனைகள் வழங்கி வழிநடத்துபவர்களது முயற்சியும், உடன் நின்று பணி செய்து வரும் பலரின் பணியும் நன்றியுடன் நினவு கூறத்தக்கது.

வருங்காலங்களில் சமாஜத்தின் பணி குறித்த உங்களது கருத்துக்களைக் கேட்கவும், விவாதித்து செயலாக்கம் தரவ வேண்டும் என்பதற்காகவே இன்றைய கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. இளைய தலைமுறையினர் சிறப்பான பங்கு பணியேற்பது பெரிதும் வரவேற்கப்படுகிறது.

இணைப்பில் இருக்கும் மஹாப்பெரியவாள் பரிந்துரைத்த, “தசோபதேசம்” (பத்துக் கட்டளைகள் -Ten Commandments) குறித்து சமாஜம் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றியும் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.

இவை ஒரு வழிகாட்டியே. இதனைத் தவிர முக்கியமாக மேற்படி செயல்பாடுகளைச் சிறப்புற நடத்தத் தேவையான நிதியாதாரங்களை மேம்படுத்துவது குறித்தும் இச்செயல்களில் நாம் ஒவ்வொருவரும் எவ்வாறு பங்கேற்கலாம் என்பதுவும் விவாதிக்கப்படும். நீங்கள் புதியதாக நடைமுறைப்படுத்தக்கூடியதாக ஏதேனும் செயல்பாட்டினைக் குறித்து கருத்து பறிமாற்றங்கள் செய்ய விரும்பினால் அதனையும் வரவேற்கிறோம். அனைத்துக் கருத்துக்களும் விவாதிக்கப்பட்டு ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே செயலாக்கப்படும்.

சென்னை – 92
அன்புடன்

R. கிருஷ்ண ஸ்வாமி

ஜெய ஜெய சங்கரா!! ஹர ஹர சங்கரா!!


ஸ்ரீ குருபாதுகா சமாஜம் அறக்கட்டளை
Plot No 369/2, முதல் பிரதான சாலை, நடேச நகர், விருகம்பக்கம், சென்னை - 600092


Designed and maintained by AKR Consultants