ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
"SPOKEN ENGLISH"
"FREE OF COST"
Saturdays & Sundays
10.00 AM – 11.15 AM
Eligibility: 10th STD
contact Samajam
Office Bearers
at the Temple
- Samajam Events - சமாஜம் நிகழ்வுகள்
அறக்கட்டளையின் முதல் வருடாந்திரக் கூட்டம்
நாள்: 06/09/09 நேரம் காலை 10.30 இடம் ஸ்ரீ சிவ-விஷ்ணு ஆலய வளாகம்
ஸ்ரீ குரு பாதுகா சமாஜ அறக்கட்டளை, (Sri Gurupadhuka Samajam Charitable Trust) கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, விருகம்பாக்கம் சென்னை 92 பகுதியில் மஹாப் பெரியவாள் உபதேசித்த ஆதாரக் கோட்பாடுகள் சிலவற்றை, தன் சக்திக்கேற்ப பரப்பி வந்திருக்கிறது. அவரது அறிவுரைகளை மக்களிடம் மேலும் சிறப்பாக பரப்பவும், செயல்படுத்தவும், உறுப்பினர்களின் மேலான கருத்துக்களை கேட்டறிய ஒரு சிறப்புக் கூட்டம், 06/09/2009 ஞாயிற்று கிழமையன்று ஆலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
சமாஜத்தின் மகளிர் பிரிவின் பிரதிநிதியான திருமதி C.T உமையாள் குத்து விளக்கேற்றினார். குரு வந்தனம் மற்றும் இறை வணக்கத்தைத் தொடர்ந்து திரு S.P.ராமமூர்த்தி வரவேற்புரை வழங்கியதோடு நிகழ்ச்கியினைத் தொகுத்தும் வழங்கினார். சமாஜத்தின் நிரந்தரத் தலைவர் திரு J.ராமாமிர்தம் சமாஜத்தின் ஆதாரக் கோட்பாடுகளை விளக்கி, எதிர்காலத்தில் சமாஜம் எந்த வகையில் செயலாற்ற வேண்டியிருக்கும் என்றும் கோடிட்டுக் காட்டினார்.
அதனைத் தொடர்ந்து, சமாஜத்தின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையினை சமாஜத்தின் பொதுச் செயலாளர் திரு R.கிருஷ்ணஸ்வாமி படித்துக் காட்டினார். அறிக்கையின் பிரதி ஒன்றும் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. சமாஜம் இன்னும் சிறப்பாகப் பணியாற்ற ஏற்ற நடைமுறை சாத்தியமான ஆலோசனைகளை விவாதித்து முடிவு செய்யவும், அதனில் நம் ஒவ்வொருவரின் பங்குபணி குறித்து அறிந்து கொள்ளவும், மற்றும் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்காக எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்தும், சமாஜத்தின் நிதியாதாரங்களை மேம்படுத்த எடுக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் உறுப்பினர்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டது.
சமாஜத்தின் எதிர்காலத் திட்டங்களாக, அறிக்கையில் குறிக்கப்பட்ட கீழ்க்கண்ட செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டது.
1. கல்வி மற்றும் மருத்துவ உதவிகளைத் தகுதியுள்ள நபர்களுக்கு வழங்குவது மேலும் விரிவு படுத்தப்பட வேண்டும்.
2. வேத சம்ரக்ஷணம், கோசம்ரக்ஷணம் இவற்றுக்கு நம்மால் இயன்ற அளவு முயற்சி எடுக்கப்பட வேண்டும்.
3. சமுதாய நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட நமது சநாதன தர்மத்தை விளக்கும் வகையில் புராணங்கள், இதிகாசங்கள் இவை குறித்த இசைப் பேருரைகளை இளைஞர்களே நடத்தவும், மற்றும் (திருப்பாவை, திருவெம்பாவை, தேவாரம், திருவாசகம் போன்ற) பாடல் போட்டிகளில் இளைஞர்களை பங்கேற்க ஊக்குவிப்பதன் மூலமாகவும், இளைய தலைமுறையினரிடையே அவை கூறும் நற்கருத்துக்களைக் குறித்த விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். இசை மூலம் இறைவனை அறிய இலவசத் தமிழ் இசை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
4. சிதிலமடைந்த, பழைமை வாய்ந்த ஆலயங்களை புனருத்தாரணம் செய்யத் தேவையான முயற்சிகளில் பங்கேற்பது, மற்றும் துணை நிற்பது வலியுறுத்தப்பட்டது.
5. அநாதைப் பிரேத சமஸ்காரம், கர்மாக்களைச் செய்வதற்கு ஏற்ற உதவி செய்வது முதலானவை பரிசீலிக்கப்பட வேண்டும்.
6. இளைஞர்களின் வேலை வாய்ப்பு, மேற்படிப்பு மற்றும் சமுதாயத்தில் சிறப்பான பங்கேற்க உதவும் வகையில், இலவச “SPOKEN ENGLISH மற்றும் HINDI” வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
a. (சமாஜத்தின் நெடுநாள் உறுப்பினரும் சிறந்த மனிதாபிமானியுமான திரு C.S.ராஜன் இலவச “SPOKEN ENGLISH” வகுப்புகள் எடுக்கத் தாம் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்)
7. சமாஜம் நடத்திவரும் ஜாதகப் பரிவர்த்தனை சிறப்பாகச் செயல் படவும், சமாஜ நடவடிக்கைகளை உலகறியச் செய்யவும் ஏற்ப இணைய தளம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது.
a. சமாஜத்தின் சமுதாயச் செயல்பாடுகளில் மிக்க ஈடுபாடு கொண்டவரும், தீவிர சாய் பக்தருமான Dr. கணேஷ் இணைய தளம் உருவாக்குவதில் தான் உதவுவதாகவும், சமாஜத்திற்கென ஒரு இணையதளம் உருவாகும் வரை, ஸ்ரீ சாய் ஸ்வரூபா என்ற தங்களது இணைய தளத்தில் சமாஜத்தின் செயல்பாடுகளை வெளியிடத் தனியிடம் ஒதுக்குவதாகவும் குறிப்பிட்டார்.
8. ஒவ்வொரு பணியாக விவாதித்து, தக்க செயலாக்கம் ஒன்றை உருவாக்கிய பின்னரே அதனைச் செயல்படுத்தும் முயற்சியில் இறங்குவது வலியுறுத்தப்பட்டது. சிறிது காலம் ஆனாலும், எடுத்த முயற்சியினைக் கைவிடாமல் முடிக்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.
9. உறுப்பினர் எண்ணிக்கையினை அதிகரிக்க தீவிரமான செயற்திட்டம் வேண்டும் எனவும், உறுப்பினர்கள் தாமாகவே சந்தாத் தொகையினைத் தருவதும் வலியுறுத்தப்பட்டது. ஒரு முறைக் கட்டணமாக ஒரு கணிசமான தொகையினைப் பெறுவது அறிவுறுத்தப்படது.
முடிவில் பேசிய சமாஜத்தின் பொதுச் செயலாளர் திரு R.கிருஷ்ணஸ்வாமி, அனைத்துக் கருத்துகளும் நிர்வாகக் குழுவில் விவாதிக்கப்பட்டு, தக்க செயல் வடிவம் தரப்படும் என்றார்.
கூட்ட முடிவில் பங்கேற்ற அனைவரையும் வாழ்த்தி, திரு சூரிய நாராயணக் குருக்கள் வாழ்த்துப்பா பாட, கூட்டம் இனிதே முடிந்தது.
ஸ்ரீ குருபாதுகா சமாஜம் அறக்கட்டளை
Plot No 369/2, முதல் பிரதான சாலை, நடேச நகர், விருகம்பக்கம், சென்னை - 600092
Designed and maintained by AKR Consultants

