ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
"SPOKEN ENGLISH"
"FREE OF COST"
Saturdays & Sundays
10.00 AM – 11.15 AM
Eligibility: 10th STD
contact Samajam
Office Bearers
at the Temple
-
ஸ்ரீ குருபாதுகா சமாஜம் அறக்கட்டளை
ஸ்ரீ குருபாதுகா ஸமாஜம் அறக்கட்டளை அறிமுகம்
பேரன்புடையீர்,
இக்கலியுகத்திலே, நடமாடும் தெய்வமாக, ஜாதி மத பேதமின்றி மக்கள் அனைவருக்கும் இன்றளவும் அருள் பாலித்து வருகிற, காஞ்சி மாமுனிவர், மஹாப்பெரியவாள் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் உபதேசித்த கோட்பாடுகளை, சிறப்பான முறையில், மக்களிடம் கொண்டு சேர்க்கிற பணியில், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீ குரு பாதுகா ஸமாஜ அறக்கட்டளை, (Sri Gurupadhuka Samajam Charitable Trust) என்ற பெயரில் விருகம்பாக்கம் சென்னை 92 பகுதியில் செயல்பட்டு வருகிறது.
சமுதாயத்தின் நலன் வேண்டி எல்லோரும் கூட்டாகப் பிரார்த்தனை செய்வது மிகச் சிறப்பான பலனைத் தரும் என்ற மஹாப்பெரியவாளின் அறிவுரையின் பேரில், 1994 வாக்கில், ஒரு சிறு குழுவாக தோன்றிய “ஸ்ரீ குருபாதுகா ஸமாஜம்” நமது ஆலயத்தில் அன்றாடம் நடைபெறும் மாலை வழிபாட்டில், பிரதி மாதமும், மஹாப்பெரியவாளின் ஜன்ம நக்ஷ்த்ரமான அனுஷத்தன்று, சிறு அளவில் கூட்டுப் பிரார்த்தனை நடத்த ஆரம்பித்தது. சிலகாலம் மஹாஸ்வாமிகளின் திருவுருவப்படத்தின் முன் கூட்டுப் பிரார்த்தனைகள் நடத்தப்பெற்றன. பக்தர்களின் ஏகோபித்த ஆதரவினால், 2001 வாக்கில் மஹாப்பெரியவாளின் ஐம்பொன் மூர்த்தம் சென்னையிலேயே முதன் முறையாக, நமது சிவ விஷ்ணு ஆலயத்தில், ஆலய திருப்பணிக் குழுவின் பரிபூரண சம்மதத்துடன் அருள்மிகு பிரசன்ன விநாயகர் சன்னதிக்கு முன் உள்ள இடத்தில் ஸ்ரீ குரு பாதுகா ஸமாஜத்தின் மூலம் வைதீகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மஹாப் பெரியவாள் உபதேசித்த ஆதாரக் கோட்பாடுகள் அடிப்படையில்,
தொடரும் ஆன்மீகப் பணிகள்:
கூட்டுப் பிரார்த்தனை மூலம் இறையுணர்வினை வளர்ப்பது:
• பிரதி அனுஷத்தன்றும் காலையில் பிரசன்ன விநாயகர் மற்றும் மஹாப் பெரியவாளின் மூர்த்தத்திற்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் மஹாப்பெரியவாளின் மூர்த்தத்தின் முன் கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்படுகிறது.
• 2006-ல் ஸ்ரீ சண்டி ஹோமம் நடத்தப்பெற்றது.
• 2009-ல், ஸ்ரீ ராதா கல்யாண மகோத்சவம் சம்பிரதாய பஜனைகளுடன் பக்தர்களின் சிறப்பான பங்கேற்புடன் நடத்தப்பெற்றது.
• கடந்த மூன்று வருடங்களாக அருள்மிகு தர்மசம்வர்த்தனி அம்மனுக்கு, வருடத்தில் இரு முறை ஏகதின லக்ஷார்ச்சனை செய்யப்பட்டு வருகிறது.
• மகளிர் அணியின் சிறப்பான பங்கேற்பினால், தினசரி ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமப் பாராயணமும் நடந்து வருகிறது.
வைதீக சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்து உலக நலனுக்காகப் பிரார்த்திப்பது.:
• ஒவ்வொரு வருடமும் மஹாப்பெரியவாளின் ஜெயந்தி மகோத்சவம், ஒவ்வொரு நாளும் மாலையில் இயல்/ இசை/ நாட்டிய நிகழ்ச்சிகளுடன் ஜெயந்தி நாளன்று காலையில் வைதீக சம்பிரதாயப்படியும், மிகச் சிறப்பான முறையில் பெரு விழாவாக நடத்தப்படுகின்றன. சிறப்பம்சமாக, மாலையில் கூட்டுப் பிரார்த்தனையும் நடத்தப்படுகிறது.
• ஜெயந்தி நாளன்று மதியம் சிறப்பான வகையில், சாதி மத பேதமின்றி அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்படுகிறது. மாலையில் திருவீதி உலா எடுக்கப்பெறுகின்றது.
• இந்த வருடத்திய சிறப்புத் திருவிளக்கு பூஜை மகளிரிடம் நல்ல வரவேற்பினைப் பெற்ற அம்சமாகும்.
இசை மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகள், இலவச வகுப்புக்கள் மூலம் இறையுணர்வு குறித்த விழிப்புணர்வை உண்டாக்குவது.
• ஆன்மீக/இலக்கியப் பணியின் ஓரங்கமாக பிரதி மாதமும் சொற்பொழிவுகள் ஸமாஜத்தின் அன்பர்கள் பலரின் இல்லங்களிலேயே நடத்தப்பெற்று வந்தது. கடந்த நான்கு வருடங்களாக ஆலய நிர்வாகக்குழுவின் பங்கேற்புடன், ஆலய வளாகத்திலேயே சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சிகள் அனைத்திலும் ஆலயத் திருப்பணிக் குழுவின் ஆர்வமும் ஒத்துழைப்பும் குறிப்பிடத்தக்கது.
• பெருமதிப்பிற்குரிய பிரும்மஸ்ரீ சுந்தர் குமார், ஸ்ரீ கணேச சர்மா, திரு முரளிதர ஸ்வாமிகள், திரு விக்கு விநாயகராம், அருள்மிகு காமாக்ஷி ஸ்வாமிகள், போன்ற பக்திமான்கள், மற்றும் திருமதி சுதா சேஷைய்யன், பாம்பே லக்ஷ்மி, திரு ஔவை நடராஜன், திரு இந்திரா சௌந்தரராஜன் போன்ற பல பிரபல பேச்சாளர்களின் ஆன்மீக சொற்பொழிவுகள், இசை மற்றும் இசைப்பேருரைகள் நடத்தப்பெற்றது.
• 2009 - ஜுலை மாத அனுஷத்திலிருந்து தேவாரம், திருவாசகம் மற்றும் திவ்வியப் பிரபந்தங்கள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்க, அவற்றை பிரதி அனுஷத்தன்றும் இசைக்கும் பணியும் தொடங்கப் பெற்றுள்ளது. விரைவில், முறையாக ஓதுவார் கற்பிக்கும் இலவச தேவார, திருவாசக வகுப்புகள் ஆரம்பிக்கப்படும்.
கூட்டு முயற்சியாகத் தொடரும் சமுதாயப் பணிகள்
• கடந்த 5 வருடமாக, விளம்பரமில்லாமல் குடுமப வருமானம், மாணவர்களின் ஆர்வம், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இதரத் தகுதியின் அடிப்படையில், ஏழை மாணவ/மாணவிகளுக்கு பள்ளிக் கட்டணம் மற்றும் புத்தகங்கள் வாங்க நிதி உதவி செய்யப்பட்டு வருகிறது.
• சிறிய அளவிலே பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு மருத்துவ உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
• அனைத்து இந்து சமுதாயத்தினரின் மகன்/மகள் திருமணத்திற்கான வரன் தேடும் பணியில் உதவ “ஜாதகப் பரிவர்த்தனை மையம்” ஒன்று ஏற்படுத்தப்பெற்று கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்று வருகிறது. விரைவில் இணைய தளம் மூலம் இச்சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது.
• இனி வரும் காலங்களில் அன்பர்களின் ஆதரவுடன், மஹாப்பெரியவாளின் உபதேசித்த இதர கோட்பாடுகளான சிதிலமடைந்த ஆலையப் புனருத்தாரணப்பணி, வேத சம்ரக்ஷணம், கோசம்ரக்ஷணம், பிடி அரிசி திட்டம், இலவச சமஷ்டி உபநயனம் மற்றும் சமஷ்டி திருமணங்கள், அனாதைப் பிணங்கள் நல்லடக்கம், போன்றவற்றையும் இயன்ற வரையில் செயல்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
• ஸமாஜத்தின் வளர்ச்சியில் சிறப்பாகப் பங்கேற்று மஹாப்பெரியவாளின் பாதாரவிந்தத்தில் சரணடைந்த தெய்வத்திரு ஸ்ரீனிவாசன் மற்றும் “குருஜி” சிவராமகிருஷ்ணன் அவர்களுக்கு ஸமாஜம் நன்றிக் கடன்பட்டிருக்கிறது.
• இன்றளவும் இந்த ஸமாஜம் சிறப்பாகப் பணியாற்ற ஆதரவு தருபவர்களுக்கும், தக்க ஆலோசனைகள் வழங்கி வழிநடத்துபவர்களது முயற்சிக்கும், நிதியுதவி அளிப்பதோடு உடன் நின்று பணி செய்பவர்க்கும், மஹாப்பெரியவாள் அருள் உண்டு என்பதற்கு, அனுபவபூர்வமாக உணர்ந்த அன்பர்கள் அநேகம் பேர் ஒவ்வொரு அனுஷத்தன்றும் தங்களின் அனுபவத்தினைப் பகிர்ந்து கொள்வதே சான்று!
ஸ்ரீ குரு பாதுகா ஸமாஜ அறக்கட்டளை நிர்வாகிகள்
ஸ்ரீ குருபாதுகா சமாஜம் அறக்கட்டளை
Plot No 369/2, முதல் பிரதான சாலை, நடேச நகர், விருகம்பக்கம், சென்னை - 600092
Designed and maintained by AKR Consultants

