Slideshow 1
Slideshow 2
Your Feedback
Navarathri 2010

Plot No 369/2, First Main Road, Natesa Nagar, Virugambakkam, Chennai 600 092

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

SPOKEN ENGLISH CLASS
Free of cost
Saturdays & Sundays
10.00 AM – 11.15 AM

Eligibility: 10th STD
contact: Samajam Office Bearers
at the Temple

ஸ்ரீ சிவ - விஷ்ணு ஆலயம்

ஸ்ரீ சிவ - விஷ்ணு ஆலயம், நடேச நகர்

ஸ்ரீ பிரசன்ன விநாயகர் துதி

ராகம்: சரஸ்வதி தாளம் : ஆதி

வினைகள் எல்லாம் நல்ல விளைவை நிகழ்த்திட
வெற்றியளித்துடும் நாயகரைத் தொழுவோம்!

வினைகள்

அலைகடல் நிகர்த்ததென அறிவினைத் தருபவராம்
ஆனந்த கணபதியின் அடி பணிந்தே தொழுவோம்!

வினைகள்

நன்மணி அணியெனவே நாடிய பொருள் தருவாள்
பொன்மகளும் போற்றப் புவிமிசை உயர்ந்திடுவார்
பேசுமோர் சிறப்பினிங்கு “பிரசன்ன விநாயகனை”
வாசமலர் தூவி வணங்கித் துதித்திடுவோம்!!

வினைகள்

ஸ்ரீ பிரசன்ன மாருதி துதி

வானர சிரேஷ்டனாம் வாயுக் குமாரன் தன்னை
தேனமிழ்தத் தமிழில் தினமும் துதி மனமே!!

வானர

ஆனதோர் கல்விச் செல்வம் அனைத்தும் நல்கிடுவான்
அனைத்துலகும் காக்கும் ஆஞ்சநேய மூர்த்தி

வானர

வானவரும் போற்றும் வாழ்வமெக்கே அருள்வான்!
தீனபந்து அவனே; தினமும் நமைக் காக்கும்
நாமமிது உரைப்பார் நாடிய வரமருள்வான்; ராம
நாமமிது உரைப்பார் நாடிய வரமருள்வான்.
மாமலர்ப் பாதம் மகிழ்ந்து தினம் தொழுவோம்!!

வானர

ஸ்ரீ பிரசன்ன துர்காம்பிகை துதி

ராகம்: பூர்வி கல்யாணி தாளம்: ஆதி

காமகோடி பீடவாஸினி; காமாட்சி
நாமம் பலவாகி நம்மையெல்லாம் காக்கும்

காமகோடி

தேமதுரத் தமிழில் தினமுனைத் துதித்தறியாப்
பாமரன் இவனுக்கும் (அருள்) பரிந்துதவும் தாயே

காமகோடி

ஆகமங்கள் போற்றும் அகிலாண்ட நாயகியே!
அனைத்துலகும் காக்கும் அன்னபூரணித் தாயே
ஏகச்சந்தக்கிராஹியாய் இயங்கும் “பிரசன்ன துர்கா”
எங்கள் குறை தீர்க்க இதயம் கனிந்து வாராய்!!

காமகோடி

கருத்தாக்கம் மற்றும் இசை: செபரா

நடேச நகர் சிவ – விஷ்ணு ஆலயம் – ஒரு அறிமுகம்

அழகிய சென்னை மாநகரின் ஒரு அங்கமாக, விருகம்பாக்கம் பகுதியில் உள்ள அருள்மிகு சிவ விஷ்ணு ஆலயத்தின் அற்புதக் காட்சியினைக் காணுங்கள்.

1960–ஆம் ஆண்டுகளில் சிறிய விநாயகர் ஆலயமாக இருந்த இந்த திருக்கோயில், இப்பகுதி மக்களின் பேராதரவின் காரணமாக, சிறிது சிறிதாக மேம்படுத்தப்பட்டு, இன்று 12 க்கும் மேற்பட்ட சன்னதிகளுடன் மிகச் சிறப்பான தோரண வாயிலோடு அழகிய தோற்றப் பொலிவுடன் காணப்படுகிறது.

எந்த ஒரு செயலையும் தொடங்குமுன், விநாயகரைத் துதித்துத் தொடங்குவது போல,. இந்நகரிலும் முதன் முதலில் ஆலயம் அமைக்கப்பட்ட பொழுது, அது விநாயகர் ஆலயமாகத்தான் இருந்தது. பிறகு கால ஓட்டத்தில் அருள்மிகு பிரசன்ன விநாயகர் சன்னதியுடன் அருள்மிகு தர்மசம்வர்த்தனி சமேத அருள்மிகு ராமநாத ஸ்வாமி, அருள்மிகு கல்யாணராமர், அருள்மிகு ஆஞ்சநேய ஸ்வாமி, அருள்மிகு முருகன், அருள்மிகு தர்மசாஸ்தா, அருள்மிகு துர்கை, அருள்மிகு நவக்கிரகங்கள், அருள்மிகு சக்கரத்தாழ்வார்/நரசிம்மர், அருள்மிகு தன்வந்த்ரி, அருள்மிகு ஹயக்கிரீவர், அருள்மிகு காலபைரவர் எனப் பல தனிச் சன்னதிகளும், அருள்மிகு குருவாயூரப்பன், அருள்மிகு லக்ஷ்மி நரசிம்மர் அருள்மிகு தக்ஷ்ணாமூர்த்தி இவை பிரகாரத்து சுவர்களில் சிற்பங்களாகவும் வடிக்கப்பட்டு வணங்கப்படுகிறது. ஆகம விதிப்படி தினமும் மூன்று கால பூஜைகள் நடத்தப்படுகின்றது.

“பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது” என்றொரு பழமொழி உண்டு அதாவது பிள்ளையார் பண்டிகை தொடங்கி ஹனுமத் ஜெயந்தி வரை என்று அதற்குப் பொருள். இந்த ஆலயத்தில் அனைத்து கடவுளுக்கும் அவரவருக்குரிய நாளில் விழாக்களும் எடுக்கப்படுகின்றன. விநாயக சதுர்த்திக்கென மூன்று நாட்கள் இசைக் கச்சேரி, உபன்யாசம் திருவீதி உலா என சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கந்தனுக்குரிய ஸ்ஷ்டி, விசாகம், கார்த்திகை நாட்களில் விசேஷ அபிஷேகங்கள், ஆராதனைகள், இசைக் கச்சேரிகள் நடத்தப்படுகின்றன. ஆண்டாள் திருக்கல்யாணம், சீதாகல்யாண மகோத்ஸவம், மிகவும் சிறப்பாக சம்பிரதாய பஜனைகளுடன் கொண்டாடப்படுகின்றன. ஹனுமத் ஜெயந்தி, பைரவருக்குரிய ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. ஆருத்ரா தரிசனம் மற்றொரு சிறப்பான நிகழ்ச்சி. விழாக்கள் அனைத்தும் அவை நடத்தப்படும் முறை மாறாமல்,கொண்டாடப்படுவது ஒரு சிறப்பான அம்சம்.

கார்த்திகை மாதங்களில் தினமும் ஸ்ரீ ஐய்யப்பன் சன்னதியில் அபிசேஷக ஆராதனையும், பிரார்த்தனையும், மலையேறுவோர் இருமுடி கட்டுவதும் சிறப்பான நிகழ்ச்சி. சரண கோஷம் விண்ணைப் பிளக்கும்

தினந்தோறும் விஷ்ணு சகஸ்ரநாமப் பாராயணம், கந்த சஷ்டிக் கவசம், நாலாயிர திவ்யப் பிரபந்தம் என ஆலயமே பக்திக் கடலாக இருக்கும்.

ஸ்ரீ குரு பாதுகா சமாஜ பக்தர்கள் பலர் ஒன்றுகூடி ஆலயத்தில் ஒவ்வொரு அனுஷத்தன்றும் மாலை மஹாப்பெரியவர் மூர்த்தத்தின் முன் கூட்டுப் பிரார்த்தனை செய்வது ஒரு தனி அனுபவம்.

ஸ்ரீ விஸ்வரூப சாய் சமாஜ அன்பர்கள் ஒன்றாகக் கூடி பஜனை செய்வது மற்றுமொரு சிறப்பான நிகழ்ச்சி.

தற்பொழுது ஸ்ரீ குரு பாதுகா சமாஜத்தின் மகளிர் அணியும் ஸ்ரீ சிவ-விஷ்ணு ஆலயமும் இணைந்து ஸ்ரீ லலிதா கோடியார்ச்சனை பாராயண நிகழ்ச்சி நடத்தி வருகிறது

ஒவ்வொரு நாளும் சுண்டல், தயிர் சாதம், எலுமிச்சம் பழ சாதம் கேசரி என அறுவகை சுவையுடன் பிரசாத விநியோகமும் உண்டு. இப்பிரசாதத்தின் வகைகளும் அளவும் இந்த ஆலயத்திகு மாலையில் வருபவருக்கு, இரவு உணவு தேவையில்லை என்று சொல்லும்படி இருக்கும் என்றால் அது மிகையாகாது.

இதுவரை ஆலய நிர்வாகம் நடேச நகர் சிவிக் அஸோஸியேஷனின் ஒரு பகுதியாக, தனிப்பட்ட நிர்வாகக் குழுவினால் நடத்தப்பட்டு வந்தது. இப்பொழுது “ஸ்ரீ பிரசன்ன விநாயக பக்த ஜன சபா” என்றொரு அமைப்பு உண்டாக்கப்பட்டு, அஸோஸியேஷனின் வழிகாட்டுதலுடன் நிர்வகிக்கப்படுகிறது.

இந்த நகரின் இறையன்பர்கள் அளிக்கும் நன்கொடைகள், மனமார்ந்த ஒத்துழைப்பு இவற்றினை நல்லபடியாக பயன்படுத்தி அவர்களின் நம்பிக்கைக்கும் பாத்திரமாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இவ்வாலயத்தின் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட அன்பர் திரு A.K. நரசிம்மனும் அவருக்கு உற்ற துணையாக தற்பொழுது உடன் பணியாற்றும் அன்பர்கள் திரு N.V. நரசிம்மன், திரு S.கிருஷ்ண மூர்த்தி, திரு. R.சுந்தரராஜன், திருமதி C.T.உமையாள் போன்ற பலரின் சிறப்பான பணி மறக்க முடியாத, மறுக்கவும் முடியாத ஒன்றாகும்..


ஸ்ரீ குருபாதுகா சமாஜம் அறக்கட்டளை
Plot No 369/2, முதல் பிரதான சாலை, நடேச நகர், விருகம்பக்கம், சென்னை - 600092


Designed and maintained by AKR Consultants